Thursday, April 11, 2013

ஈழமே நீ இடுகாடா....? - abisheca


ஆலயமணி ஓசையில்....
ஆனந்தமாய் மலர்ந்தது....
விடியற்காலை.
ஆட்னரி ஷெல் சத்தத்தில்....
ஆகுதியாய்ப் போனது...
எம் இரத்த உள்ளங்கள்.

நாற்று நடும் வயலும்...
சுடுகாடாய் மாறியது
நமக்கு அதிசயமல்ல...!
வீடே சுடுகாடாய்....
வீசும் காற்றே விசப்புகையாய்
மாறியதும் அதிசயமல்ல...!

தூங்குவது போல் நடித்த....
அன்னிய நாடுகளை
நினைத்தால் அதிசயம்...!
திரள் திரளாய்க் கொன்று குவிக்கும்
அணு ஆயுதங்களைப்  பரிசீலமைக்காய்
ஈழத்திற்கு (கள்ளமாய்) அனுப்பியது அதிசயம்...!

No comments:

Post a Comment