Friday, April 5, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - மலிக்கா



புகழ்போதை ஏற ஏற
புத்திகள் தடுமாறும்!

பணபோதை ஊற ஊற
பகைகள் தோன்றும்!

நிலபோதை கூட கூட
நிலைகள் மாறும்!

ஆணவபோதை ஏற ஏற
அழிவுகள் கூடும்!

காதல் போதை ஏற ஏற
கிறுக்கு பிடிக்கும்!

காமபோதை  கூட கூட
குற்றம் நீடிக்கும்!

சாதிபோதை ஊற ஊற
அறிவு குறையும்!

நீ நானென்றபோதை ஊற ஊற
நிம்மதி குழையும்!

போதை சேற்றில் ஊறிநாறும்
மனித நாற்றுகள்!

போதை தெளிந்தால் மனிதஉள்ளம்
தெளிந்த ஊற்றுகள்...

No comments:

Post a Comment