மாந்தநேய மழையில்லாமல்
மனவெளிகள் பாலைவனமாகிவிட
முட்செடிகளாய் முளைத்துக்கொண்டிருக்கிறது
தீவிரவாதம்.
நம்மை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயனின்
பிரித்தாளும் உத்திகள் இன்னும்
உயிரோடு இருப்பதாலும்…
இன மத மொழிகளால்
உயர்வு தாழ்வு பேசப்படுவதாலும்…
குறிப்பிட்ட சமூகத்திற்கு
இழைக்கப்படும் அநீதிகளை
தட்டி கேட்காத அரசின்
தான்தோன்றித்தனத்தாலும்…
தனி மனித உரிமைக்கு
உத்திரவாதம் இல்லா காரணத்தாலும்…
செழித்து வளர்கிறது தீவிரவாதம்
அன்பும் சகோதர உணர்வும் மேலோங்கி
அனைவரும் சமம் என்கிற நீதி
நிலைபெறும் யுகத்தில்
அழிந்துவிடக்கூடும் அற்ப தீவிரவாதம்.
No comments:
Post a Comment