Friday, April 5, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம் - பூவன்


எட்டுத் திக்கும் எங்கள் பூமி
கொட்டி முழங்கிய காலம் போய்
சிட்டுக்களும் சிதற சிதற
மொட்டுகளும்  கதற கதற
பட்டுப் போனதே  ...

அழகிய பொட்டிட்டு
அரும்பு மலர் சூட்டி
அன்பாய் தாலாட்டிய அன்னையோ
அதிர்ந்து அலறித் துடித்தே !

முல்லை மலரவள்
முள்ளால் குத்தியது போல்
முகமெல்லாம் துடிக்கவே
அமிலம் வீசிய
அகமில்லாத பேய்கள்
புறமெல்லாம் ஆடியதே ?

புதுமலராகப் புன்னைகையுடன்
பூத்தப் பூக்கள் எல்லாம்
புழுதியில் குருதிக் கொட்ட
புண்பட்டுப் போனதே !

மென்மையின் இலக்கணமாம் பெண்மை
வன்மைக் கொண்டோரால்
தன்மை மாறியே தலைகீழாய்
தறிகெட்டுப் போனதே  !

அழகு நீராடிய உன் மேனியோ
அமிலம் நீராடி அழிந்ததே  !
அன்பெல்லாம் அழுதுக் கண்ணீர் சிந்த
அகிலமெல்லாம் அதிர்ச்சியில் உறைந்ததே  !

செந்நீரெல்லாம் கொதிக்கவே
நெஞ்சம் எல்லாம்  பதைக்கவே  
அஞ்சாமல் அரக்கன் செய்தச் செயலை 
வஞ்சம் கொண்ட வன்கொடுமையை
வார்த்தைகள் கலங்கிடவே 
வரிகளும் கண்ணீர் சிந்தியதே  !

வண்ணமலர் நீயோ வாடியே
அங்கமெல்லாம் துடிக்கவே
அமிலத்தீயில் கருகிப் போனாயே  !
அமிலத்தீயில் கருகிப் போனாயே  !

No comments:

Post a Comment