Thursday, April 11, 2013

நாணுகிறாள் தமிழ்த்தாய் - பூணுகிறாள் புதுநகை - Ramkishore

சித்திரக் கவி (எ) மிறைக்கவி எனும் மரபுக் கவிதை வகை






மணியழகுத் தமிழ்மங்கையணி
மணியழகுத் துளிப்பா
மறைநிறை அழகுமங்கையணி
மணியழகுப் புதுக்கவி
சொக்கிடும் காதல்மங்கையணி
மணிமாலையைப் போன்றே
ஆங்கோர் ஈங்கோர்
தடமாய் மரபுக்கவி
அறிவுசார் அருவிசொரியும்
இணையத் தமிழ் -
ஏதமில் புதுநகையுடை தாயே!!

குறிப்பு:

1. தமிழன்னையின் அணிகலன்களான மகுடம், கம்மல், கழுத்து மாலை, ஒட்டியானம் மற்றும் அன்னை அமர்ந்திருக்கும் பீடம் முதலியவை மட்டும் கவிதை எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

2. சித்திரத்தில் எழுத்துக்களின் வரிசை 1,2,..8 முதலான எண்வரிசையின் மூலமும் திசைக்குறிகள் மூலமும் குறிக்கப்பட்டுள்ளது.

3. மேல் இருந்து கீழ் செங்குத்தாகப் பார்க்கையில் ‘மிறைக்கவி’ எனும் வார்த்தை அமையுமாறு வடிக்கப்பெற்றுள்ளது.

4. (காதல் மங்கை அணி) மணிமாலை : புணர்ச்சியின் போது தலைவன் தலைவியின் உடம்பில் பதித்திடும் பற்குறி

No comments:

Post a Comment