அமிலத்தில் ஆடிய அனிச்சம் - கே, பாலா
காதலென
காமம் மிகுந்த
ஆண் உரு
கோழையே,,,!
உனக்கு
பூவோடு போரா…?
ஆயுதமாக அமிலமா-?
விட்டுக்கொடுப்பது
காதல்,,,!
காதலுக்காக காதலையும்,,,
உன்னதம்
உணரா,,,நீ
உச்சரிக்கலாமா காதலை,,,,
வெண்ணீர்பட்டாலே
வேதனை தீருமா?
அமிலம் பட்டால
அனிச்சம் தாங்குமா,,?
சதைப்பித்தர்களின்
பிடியிலே
வித்யா,,,,
வினோதினி,,,
இனி
எத்தனை உயிர்களோ-?
இனியேனும்,,,
சட்டம் விழிக்கட்டும்,,,,
இல்லையெனில்,,,,
அயோக்கியர்களையும்
அமிலத்தில்
குளிப்பாட்டுவோம்
No comments:
Post a Comment