Thursday, April 11, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...! - பூர்ணகுரு


காலத்தைக் களவாடியத் தொழில் நுட்பத்திற்கு
கையாலாகா உழவன் எழுதிக் கொள்வது
அணு ஆயுதம் ஆகாய விமானம்
இணையத்தளம் ஈடில்லா பெரும் பயன்

அ ஆ முதல் ஆயிரம் கொடுத்தாய் - அதில்
நல்லது பாதி கேடுகோடி தந்தாய் 

உலகைத் திரையில் உரித்துக் காட்டினாய்
உலகத்தை உன்னுள் புதைத்துப் பூட்டினாய்
வளமில்லா செல்வம் ஈட்டச் செய்தாய்
விலையில்லா உறவுகள் அன்பைப் பறித்தாய்
நிலையில்லா பொருள் வாங்கப் பணித்தாய்
நிகரில்லா நிம்மதியை தொலைக்க வைத்தாய்

காடுமலை அழித்துக் கட்டடங்கள் அமைத்தாய்
கம்மாக்கரை வயல்களை வெட்டவெளி ஆக்கினாய்
இருக்கும் நிலங்களில் பயிர் விதைத்தாலும்
இரவுப்பகல் பட்டப்பாட்டிற்கு குறைவிலைநிர்ணயம் குறித்தாய்

செல்வநிலை ஆனாலும் இந்நிலை தொடர்ந்தால்
உலகம் முழுதும் பணம்தான் உணவு
உழவுக்கில்லை மண் மழை வரவு
உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!

No comments:

Post a Comment