Thursday, April 11, 2013
விடியலின் வெளிச்சம் எங்கே - kavi bala
“சிறப்பு மிக்க நாட்டினிலே
பிறந்தவள் என்ற பெருமாப்போடு”
பெண் என்றhல் தெய்வமென
போற்றி துதிக்கும் திருநாட்டில் பிறந்தவள்….
ஆம் தலைநகர் வீதிதான்….
மகத்துவம் நிறைந்த மார்கழியாம்
அவளுக்கு மட்டும் நீர்விழியாம்
அறுவர் கூட்டம் ஒன்று… அவள் அங்கத்தை ஆங்காங்கே
ஆறு மணி நேரமாய் துளைத்தெடுத்த மார்கழி மூன்று….2012
தலைநகர் வீதியில் அவள் கதறல் கேட்டு
தன்னிலை ‘கையறு நிலை’ என
மூன்றாம் பிறையும் முன்பனி மேகமும்
மௌனமாய் பயணித்த - மார்கழி மூன்று….2012
அம்மனோ…. அனுமனோ….
அவளுக்கோ…. அவள் நண்பனுக்கோ….
உதவிக்கு கிட்டாத - மார்கழி மூன்று….2012
அவள் உயிர் பிரியும் - வேளை
முதல் இரண்டு வரிகளும் பொருளற்று போனது
சட்டம் பிறந்து ஜனநாயகம் தழைக்கும்
ஆனால்….; அவள்….? இன்னும் இந்நிலை தொடருதே….?
balakaviyarasan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment