Wednesday, April 10, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - kavivetri



உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
உழுதவன் அழுதால் உழவே காவு
விழுதாய் வேராய் உயிர்தரும் உழவனை
தொழுவதை மறந்தோம் உழவையும் துறந்தோம்.

கழனியில் பயிர்கள் செழித்துச் சிரிக்க
கனவது கண்டு நனவில் சிரித்தான்!
மலமல வென்றே உயர்ந்த மாளிகை
பொலபொல வென்றே உகுத்தான் கண்ணீர்!


ஏறும் இல்லை நீரும் இல்லை
ஏர்பிடித்த உழவனும் இல்லை
உழுதவன் அழுதால் உழவே காவு
உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு!




kavivetri.90@gmail.com

No comments:

Post a Comment