ஆற்றுக்குள் நீரு !சேற்றுக்குள் காலு !!
வியர்வைக்குள் ஆளு !புருவ உயர்வுக்குள்
எதிர்காலம் பற்றிய ஏக்க கூறு !
வறுமைக் கூட்டுக்குள் கொள்ளை பேரு !
விவசாயி என்பது இவர்கள் பேரு !
கையிலே கலப்பை,இடையிலே
ஒரு முழதுணிப்பை !கால்களும் தோள்களும்
உழவனின் சொத்து !
இல்லை ! இல்லை !! இதுதான்
குடியான குலத்தின் செல்லபிள்ளை !
ஆண்டாண்டு காலமாய் இடைதரகரின் தொல்லை,
இதற்கு முடிவேயில்லை ! பூச்சி மருந்துதான்
அவன் வாழ்வின் எல்லை !
வாழ வழி இல்லாத மண்ணிலே ,
வாழ தாகம் கண்ணிலே !
வறுமைசுமை நெஞ்சிலே
பற்றிக்கொண்டது அஞ்சிலே !
No comments:
Post a Comment