Saturday, April 6, 2013

தீராத தீவிரவாதம் ! - வசீகரப்ரியன்



கொலையை கலையாக
கொல் "கையாக கொண்ட
கள்வ எந்திரங்களின்
தொல் தொழில் !

உதிரத்தில் குளித்து துயரத்தில் மகிழ்ந்து
விலையற்ற உயிரை முறையற்ற முறையில்
துணிவுற்று கொன்று பொறுப்பற்று களிக்கும்
சிரசற்ற மனிதர்களின் உலகம் !

இங்கு !

சில்லறை பெற்றதும்
சிவப்புகறை பட்டதும்
சிலை உற்றது மனிதநேயம் !
சிந்திக்க தெரிந்தும் இவர்கள்
மனிதர்கள் இல்லை பாவம் !


பழிக்கு பழி ! விழிக்கு விழி !!
என்று வரிக்கு வரி உலராத
உதிரக்கவிதைகள் எழுதப்படுகின்றன !


தீவிரவாதம் ! பிரிவினை நோக்கம் !!
பாவிகள் வாழும்
கோழைகள் உலகம் !
இனம் அழிக்கும்
பிணம் திண்ணி கழுகுகள் மனதில்
வளருவது பிற நாட்டு தீய எண்ணங்கள்
என்னும் கொடிய விழுதுகள் !
தீவிரவாத வரலாறு
ஒருபோதும் வளராது !

No comments:

Post a Comment