Thursday, April 11, 2013
காதலெனும் சாவினிலே - Ramkishore
(மரபுக் கவிதை – ஆசிரியப்பா இலக்கணம்)
காதலுன் கையைக் கோர்த்திட வந்தேன்
காலன் கைகளைக் குலுக்கிட வைத்தாய்
இளைத்துப் போகா இன்பம் வேண்டிட
துளைத்துப் போன இதயம் தந்தாய்
கள்ளி நீயும் கள்ளி முள்ளின்
உள்ளே தள்ளிய உள்ளம் நோவுது
கிள்ளை உள்ளம் கொள்ளை கொள்ளாத
மள்ளம் குன்றிய உயிரும் நோவுது
களைத்து கண்அயர் பொழுதும் உன்முகம்
முளைத்து என்னைக் கொல்லுது பெண்ணே
வேகும் உந்தன் நினைவின் முன்னே
வேனில் வெப்பமும் குளிருது கண்ணே
இளவேனிற் கனாக்கள் கலைந்து போய்விட
இளமையும் கனலாய்க் கொதிக்குது பெண்ணே
காதல் செத்தே போயினும்
பேயாய் வந்தெனைக் கொல்லுது கண்ணே!
திணை : பாலை
துறை : தலைவியை இழந்த தலைவன் வருந்திக் கூறியது
உரிப்பொருள ; : பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கருப்பொருள் : பெரும்பொழுது - இளவேனில்
மரம் - கள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment