Thursday, April 11, 2013

ஆனாலும் காதலிக்கிறேன் - பார்த்திபன்


ஆணுமில்லை பெண்ணுமில்லை
ஆனாலும் காதலிக்கிறேன்!

அருவெருப்பாய் பலர்
பார்ப்பது தெரியும்!
ஆனாலும் காதலிக்கிறேன்!

குரலில் ஆணாய்
குணத்தில் பெண்ணாய்!
ஆனாலும் காதலிக்கிறேன்!

உள்ளத்தின் அழகு
உருவத்தில் இல்லை!
ஆனாலும் காதலிக்கிறேன்!

தினமொரு கிண்டல்!
திசைக்கொரு கேலி!
ஆனாலும் காதலிக்கிறேன்!

திருமண பாக்கியம்
சிறிதும் இல்லை!
ஆனாலும் காதலிக்கிறேன்!

கனவில் வந்து கவலை துடைத்து
கனிவாய் தினமும் காதல் பேசும்
கள்வன் அவனைக் காதலிக்கிறேன்!
அவன் நினைவில் மூழ்கிப் பேதலிக்கிறேன்!

No comments:

Post a Comment