Thursday, April 11, 2013
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - சதீஷ் ஷங்கர் .M
குணத்தை தொலைத்து
குலம் கேட்ட நிலையிலும்,
"பணபோதை " விடுவதில்லை
- சில பணத்தாசை மனிதர்களுக்கு !
படிப்பை விடுத்து
வாழகைப்பிடிப்பும் விடுபட்ட நிலையிலும் ,
"பதவிபோதை " விடுவதில்லை
- சில பதவிப்பைத்தியங்களுக்கு !
ஆசைகளெல்லாம் நிராசையாகி ,
வாழ்கையாட்டம் ஓட்டம்கண்டநிலையிலும் ,
"ஆடம்பரபோதை" விடுவதில்லை
சில ஆடம்பரவாசிகளுக்கு !
மனிதமனங்கள் ஒன்றுபட்டநிலையிலும்
மனித உயிர்களை வேறுபடுத்திப் பறிக்கும்
"மதபோதை " விடுவதில்லை
- இன்னும் சில மனிதமிருகங்களுக்கு !
மனிதம் கொன்று
பல போதைச் சேற்றுகளில் சிக்கி
மனிதமற்ற வாழ்க்கை வாழும் வரை
"மனிதவாழ்க்கை " என்றும் அர்த்தபடுவதில்லை !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment