கமண்டலத்தில் காவேரி - மலைமகள்
நதிகளுண்டு நீரில்லை
நாம் வாழ வழியில்லை
விதியுண்டு விடிவில்லை
விதிசொல்லயாருமில்லை
கமண்டலத்தில் காவேரி
கைவசம் இருந்தாலும்
நமது தொண்டையை
சேர தவம் செய்யவில்லை
தாகம் தீர்க்காத நதிகள்
தாயாக திரிந்த போதும்
தண்ணீர்த்துளிகள் தேடி
தவிக்கின்ற மனங்கள் கோடி
நன் நீர் ஊற்றையே
நாசம் செய்கிறார்கள்
நதிநீரைப்போத்தலிட்டு
நமக்கே விற்கிறார்கள்
No comments:
Post a Comment