Friday, April 5, 2013

ஆனாலும் காதலிக்கிறேன் - பூவன்



காலங்கள்  மாறும் காதலும்  மாறும் 
கண்ணீர்  மட்டுமே மீதம் 
ஆனாலும் காதலிக்கிறேன்....

நினைவெல்லாம்  பூத்தப் போதும் 
நித்திரையில்  பூத்திடும் 
நித்தம் நித்தம் நீங்கிடும் 
கனவுப்  பூக்களாகவே நீ
ஆனாலும் காதலிக்கிறேன்....

விழிச்  சுமக்கும்  வலி 
விரல்  துடைத்திடவே இல்லாமல்
விழுந்தோடும்  கண்ணீர் 
ஆனாலும் காதலிக்கிறேன்....

விரல்  கோர்த்து  விழிப் பார்த்து 
விளையாடிய  காலங்கள் 
விலையில்லாத  காலங்கள் 
விடைப்  பெற்றே நீ சென்றாய் 
விளையாட்டாக விளையாடி 
வினாவாகவே நான் 
ஆனாலும் காதலிக்கிறேன்...

No comments:

Post a Comment