Monday, April 8, 2013

தீராத தீவிரவாதம் - ஷைலஜா


 தீவிரவாதத்தின் காலை ஒடியுங்கள்
தீவிர வதம் செய்யுங்கள்

தீவிரவாதமெனும்தீயினை அணைக்க
பனிக்குட நீரைத்தெளிக்கவும்
பெண்ணின் கருப்பை தயார்!

பூ மண்டலத்தை சந்திரமண்டலமாக்கிவிட்டார்கள்
பார்க்குமிடமெங்கும் பதுங்குக்குழிகளைப்
பாவிகள் பரவி வைக்கிறார்கள

குண்டுகள் வைத்து குவலயம் அழிக்கும்
நண்டு சிண்டுகளுடன் குலத்தை சிதைக்கும்
தீவிரவாதத்திற்கு தீ வைக்கவேண்டும்!

அப்பாவிமக்களின் அன்றாட வாழ்வைக்குலைத்து
தப்பித்துச்செல்லும் தீவிரவாதிகளை
உப்புக்கடலில் உடலுரித்து வீசவேண்டும்.

மனித வெடிகுண்டாய்
மாறிவரும் மாக்.களுக்கு
புனித வாழ்வைப்
புரியவைக்கவேண்டாம்
பூசுங்கள் கரியை,
  செய்யுங்கள் ஈமக்கிரியை..

குண்டு மழை பெய்து கட்டிடத்தூண்கள்
விண்டு பிளக்கும் வேளையில்
தீவிரவாதிகளின்
வயிற்றைக்கிழித்துக்
குருதியைப்பூசிக்கொள்ள
வரும் அவதார நரசிம்மம்!
கருகும் அன்று தீவிரவாதம்!

shylajja@gmail.com

No comments:

Post a Comment