நாள் நட்சத்திரம்
பார்த்து வருவதல்ல காதல்
பின்-
சாதிமாறி வந்தால்மட்டும்
எதற்கிங்கு மோதல்?
மனித உயிருக்கு இல்லாத மதிப்பு
சாதிக்கு இருக்கிறது
இந்த சாக்கடை புத்தியால்
சமூகம் என்ன சாதிக்க இருக்கிறது?
சாதி விஷம் கொடுத்து
சாகடிக்கப்படும் காதலோடு
சேர்ந்து செத்துப்போகிறது முற்போக்குவாதம்
எது பெரிது? சாதியா? காதலா? என்று
வீதிக்கு வீதி நடந்துகொண்டிருக்கிறது
வீண்விவாதம்
தீண்டாமையை முன்னிறுத்தும்
சாதி நாகமே!
இனியேனும் காதலை தீண்டாமல் போ!
காதல் தவளையல்ல - கழுகு
தயவு செய்து அதை சீண்டாமல் போ!
No comments:
Post a Comment