Thursday, April 11, 2013

உழவனுக்கு ஈவு உயிரே - sakthivel.B


            
அன்னையால் படைக்கபட்டு
ஆண்டவனால் வளர்க்கபட்டு
இமயத்தால் காக்கபட்டு
ஈகரையால் தமிழூட்டபட்டு
உழைத்து வாழும் நமக்கு
ஊண் அளிப்பது உழவன் தானே!
எளிமையினும் வறுமையினும்
ஏழை உள்ளம் வாரி வழங்கும் உள்ளம்தானே!
ஐயம் வினவி அரசை நாடஅ
ஒளி கொடுக்கா அரசோ
ஓட்டுக்காக குடிசை நாடுதே!
ஔடதம் திட்டும் தலைவனா??
ஃஅவனே உழவன்......
 வானளவு உழைத்தாலும்
     உழவனுக்கு ஈவு உயிர்தானே!!!

                   

No comments:

Post a Comment