Thursday, April 11, 2013

நில மகள் நோகலாமா - அரசன் நியூ


சுத்தம் என்ற பெயரில் நாம் அசுத்தம் செய்கிறோம்
உடலில் வெளியேறும்  கழிவுகளை
கடலில் கலந்துவிடுகிறோம் .
ஆற்றில் விடுகிறோம்
காற்றில் கலந்து விடுகிறோம்
வழிகளில் விடுவது தற்ப்போது வழக்கம்
கழிவுகளால் .நமக்கே
அழிவுகளாக மாறும் என்பது தெரியாது
கண்ட  இடத்தில் மலம் .சலம்
உண்ட  இடத்தில் எச்சில் துப்புதல்
கொதி உலை அணு உலை
மின்காந்த வலை வானொலி அலை
கை பேசி அலை 'ஊடுருவும் அலை
இவையெல்லாம் நம் உயிருக்கு உலை
நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்
நிலமகளையும் அழித்து கொல்கிறோம்
நமக்காக பயன் தந்து/ பொறுத்துக்கொள்ளும்
நிலமகள் நோகலாமா / இனிமேலாவது
நில மகளை ;வளம் மகளாக
நோகாமல் பார்த்துகொள்வோம்

No comments:

Post a Comment