Thursday, April 11, 2013
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - புதுவைப்பிரபா
மனிதன் விலங்காய் மாற
இழி செயல்கள் புரிந்து நாற
காரணமாவது போதை
போதை…
ஆறாம் அறிவை செயலிழக்கச்செய்து
கோமா நிலைக்கு கொண்டுசெல்லும்
போதையில்தான் எத்தனை வகைகள்?
ஆண்கள் அனேகம்பேர்
அரசின் உதவியோடு மதுவின் போதையில்
பெண்களில் பெரும்பாலானோர்
தொலைக்காட்சி தொடர்களின் தீராத போதையில்
படிக்கும் வயதில் மாணவர்கள் யாவரும்
பாலியல் போதையில்
சிறுவர் சிறுமியரும் சிக்குண்டுவிட்டார்கள்
கணிப்பொறி விளையாட்டு போதையில்
இன்னும்…
புகழ் போதை… பதவி போதை….
அழகு போதை… திரைப்பட போதை…
அப்பப்பா…
இப்போது உலகம் சுழன்றுகொண்டிருப்பது
நீள் வட்ட பாதையில் அல்ல…
சீர் கெட்டு போதையில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment