Thursday, April 11, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம் - Ramkishore


செந்நீர் இனத்து ஆண் பிணங்கள்
பன்னீர் மணத்துப் பெண் இனத்தைக்
கண்ணீர் வனத்து இருளில் தள்ளிட
பெண்ணாம் அனிச்சம் அமிலத்தில் ஆடுதே
குஞ்ச நெஞ்சத்துக் கஞ்ச வஞ்சகர்
பஞ்சு நெஞ்சத்துப் பிஞ்சு குழந்தைக்குக்
கஞ்சி கொடுத்துக் கல்வி பறித்திடப்
பிஞ்சு நெஞ்சமும் அமிலத்தில் ஆடுதே
நூற்றுக்கு நூறினைக் கேட்கும் கல்லூரிகள்
வெற்றி ஆறினைத் தேடும் மாணவர்தம்
பெற்ற சாறினை முழுதும் உறிஞ்சிட
வற்றிய அனிச்சமும் அமிலத்தில் ஆடுதே
அனிச்சம் பலவும் அமிலத்தில் ஆடிட
அனிச்சை ஆகவும் வருத்தம் உறாது
அனைவரும் தத்தம் கருமத்தில் மூழ்கினால்
இனிவரும் நாளிலும் மாற்றங்கள் அரிதே

No comments:

Post a Comment