Monday, April 8, 2013
நாணுகிறாள் தமிழ்த் தாய் பூணுகிறாள் புது நகையை - sasiva
இமயம் பிறந்து கன்னி தொட்ட
இடற்ற என் தமிழ் அன்னையே !
சங்கத்தில் சாதித்த அனைவரின் நாவிலும்
சரளமாய் புகுந்து நின்ற சரித்திர நாயகியே !
ஈரடியில் அண்டம் வென்று
இளநகை பூத்து நின்றாய்
புகுத்த முடியாத கருத்துகளை உளம் அமர்த்தி
பூணுகிறாள் புது நகையை
உயிர்மெய் என கலந்து நின்று
ஊட்டம் தந்தாய் எமக்கு நல்மொழியாய்
பழமை வென்று நின்றதனால்
பாமாலைகள் பல சூடிக்கொண்டாய்
வெட்குகிறாள் என் தமிழ்த்தாய்
வேதனை கொள்கிறாள் பிள்ளைத்தமிழ்
அந்நிய மொழிதனை அணியாய் கொண்ட
அறிவிலா தமிழ் மாந்தர்தனைக்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment