Wednesday, April 10, 2013

போதை சேற்றில் மனித நாற்றுகள் - kavivetri


போதை சேற்றில் மனித நாற்றுகள்
பாதை எங்கும் கண்ணீர் ஊற்றுகள்
மேதைகளை எல்லாம் பேதைகளாய் மாற்றும்
போதை அரக்கனை ஒழிப்ப தெப்போது?

மதுவில் மயங்கி மதியை இழந்து
பொது இடங்களிலே புழுதியில் புரண்டு
புழுவினும் கேடாய் பொழுது கழித்தால்
அழும் குடும்பத்தின் அவலம் தீருமா?

வாழ்க்கை பாதையே மயான பாதையாய்
தடுமாறி தடம்மாறி தவிக்கும் மனிதா!
இன்பத்தில் குடித்து துன்பத்தீயில் விழுவதா?
துன்பத்தில் குடித்து துயரக்கடலில் அழுவதா?

உயர்ந்த பிறப்பு மானுடப் பிறப்பு
உணர்ந்தால் தானே உலகினில் சிறப்பு!
எழாமல் விழுந்து மடிவது சரியா?
விழுந்தவன் எழுந்தால் விடியும் சரியாய்!!

kavivetri.90@gmail.com

No comments:

Post a Comment