Friday, April 5, 2013

பறந்து போன பண்பாடு - பூவன்



மாற்றங்கள் என்ற  பெயரில் 
தோற்றங்கள்  எத்தனை எத்தனையோ  !
நாகரீக ஏற்றம் எனச் சொல்லியே
அநாகரீகத் தோற்றங்கள் அத்தனையும்  ...

ஏற்றம்  மிக்க உடைகள்  யாவும்
காற்றில்  ஏற்றியே  நம் பண்பாட்டை 
தூற்றியே  திரிகின்றோம்  ....

கலைநயம்  கொண்ட  சேலைகள்  யாவும் 
கலைகூடங்களில் கண்டிடும் 
ஓலைகள்  என  ஆனதே  ?

வித விதமான உடைகளை
விலைக் கொடுத்து வாங்கியே 
தொலைத்தோம்  நாம்
விலைமதிப்பில்லாத  பண்பாட்டை ...

கலாசாரங்கள் எனக் கூறியே
நாம்  சாரமிகு  கலைநயங்களை 
கல்லறையில்  கிடத்திவிட்டோம்  ...

மனங்களைப்  பறக்கவிட்டு 
பண்பெல்லாம்  தொலைத்துவிட்டு 
பண்பாட்டையும்  பாடாய் படுத்திவிட்டோம்  ....

No comments:

Post a Comment