Saturday, April 6, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம் ! - வசீகரப்ரியன்



இதய கமலங்களின் உதயமுகங்களின் மீது
அடிக்கடி அமில வீச்சு !
வெறும் சடலங்களாய் தான்
பார்க்கிறது இளைஞர் சமுதாம் !

கமலங்களுக்கு அமில வீச்சுக்குப்பின்
உயிரோடும் உணர்வோடும் ரணத்தோடும்
வாழ்க்கை போராட்டம் ! பல சமயம்
பிறந்ததிலிருந்தே போராட்டம் !

தெய்வங்களாய்ப் பார்க்கவேண்டியவர்களை
தெய்வங்களாக்கிப் பார்ப்பதற்கு
இளைஞர் சமுதாம் மட்டுமில்லை ,
பழைய சமுதாமும் நிறைய சீர்கேடுகளும்
உறையவைக்கும் காரணிகளாகின்றன !

வினோதினிகளும் வித்யாக்களும் செய்த
பாவம் தான் என்ன ?
மலர்களுக்கு மட்டுமல்ல மரணவேதனை ,
மனம் படைத்த மனிதர்களுக்கும்தான் !

புறப்படுங்கள் ! புன்முறுவலுடன் !!
ஜீரணிக்க முடியாத நிகழ்வுகளின்
வேரறுக்க வேண்டிய காரணிகளை
கண்டுபிடிப்போம் ! களையெடுப்போம் !

ஓரணியில் திரண்டு நிற்ப்போம் !
அறியாமையை அகற்றிவைபோம் !!
ஆரணங்கு களை போற்றிவைபோம் !
மலர்களை மணம் பரப்ப வைப்போம் !

No comments:

Post a Comment