Wednesday, April 10, 2013

காதலெனும் சாவினிலே - சதாசிவம்



பார்த்துப் பார்த்து நான் ரசிச்சேன்
பசும்பொன்னா பொத்தி வைச்சேன்
பாவிமகன் மனசுக்குள், பாறையென நீ வளர்ந்தே
ஆசையுடன் காதலிச்சேன், அவளமட்டும் நான் நினைச்சேன்

ஊனாட உள்ளத்தில், உயிர்முழுக்க நனைந்தவளே
தேனாட தேவதையாய், தேற்போல நின்றவளே
மானாடும் சோலையில், மனசுபூராத் தின்றவளே
நானாட வந்தவளே, நடுவினிலே விட்டவளே

காதோரம் காதல்சொல்லி, கதைகதையாய் கனவுகாட்டி
காதலெனும் சாவினிலே, கச்சிதமாய் காலைப்பூட்டி
காலமெல்லாம் பொய்மைபேசி, கயவற்போல் கதையைமாற்றி
கடைசியில் கவிழ்த்துவிட்டே, காரணம் நட்பு என்றே

வானாளும் அரசரும் வந்துவீழ்ந்த வாசலிது
தொட்டிலுடன் தொடர்புகொள்ள தொலைபேசிக் கருவியிது
விட்டிலாய் விழவைக்கும் வெளிச்சமிகு விளக்குமிது
கல்லறையை காட்டிவிடும் காலனது தூதுமிது

தண்ணீரில் நடந்திடலாம், தரணியையும் தூக்கிடலாம்
பன்னீரில் குளித்திடலாம், பறவைபோல பறந்திடலாம்
விண்மீனை பிடிச்சிடலாம், விதைநெல்லா விளைச்சிடலாம்
பெண்மீனை புரிந்துகொள்ள, பிறவிபல வேணுமப்பா

No comments:

Post a Comment