Friday, April 5, 2013
காடுகள் மலைகள் இறைவன் கலைகள் - மலைமகள்
இறைவன் எனும் கவிஞன்
எழுதிய கவிதை இயற்கை
காடுகள் மலைகள் கலைகள்
காதலும் அவனின் கொடைகள்
அன்பின் தோட்டம் இயற்கை
பண்பின் தோட்டம் வாழ்க்கை
அழகின் தோற்றம் உலகம்
அருளின் வடிவே நம் மனிதம்
வாழ்க்கையை இயந்திரமாக்கினான்
வாழ்வுக்கு பொருள் தேடி ஓடினான்
நிலவுக்கு பயணமாய் போகின்றான்
நித்தமும் இறைவனை தூற்றினான்
அணுவைத்துளைத்ததாய் சொல்கிறான்
ஆயுதப்போட்டியை நடத்துகின்றான்
மனுவை துயரினில் மாற்றுகின்றான்
மனுடன் கடவுளாய் நடிக்கின்றான்
நிலமகள் நோக நடக்கிறான்
நீருக்குள் கழிவினை கலக்கிறான்
குலமகள் கோலத்தை களைக்கிறான்
குமிறிடும் இயற்கையால் அழிகிறான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment