Wednesday, April 10, 2013
பறந்து போன பண்பாடு - devimalar
அன்று நாம்!
பகுத்துண்டு வாழ்ந்தோம்! பல்லுயிர் ஓம்பினோம்!
பண்பட்ட சமூகத்தை பாதுகாத்து வளர்த்தோம்!
ஆன்மீகத்தின் அடித்தளமாய், முன்னோடியாய் வாழ்ந்தோம்!
கூட்டுக் குடும்ப உறவில் குதூகுலமாய்த் திளைத்தோம்!
இன்றோ!
மதங்களின் பெயரால் மனிதம் மறந்தோம்
மரங்களைப் போல மனிதனைச் சாய்த்தோம்
சாதிச் சேற்றில் சகதியாய்க் கலந்தோம்
சரித்திரச் சுவட்டில் பிழையாய் விழுந்தோம்
இப்படியே போனால்
என்னவாகும் எதிர்காலம்?
எங்கே போகும் நிகழ்காலம்?
விடியலே இல்லா இரவாய்ப் போகும்!
சிறகுகள் இழந்த பறவையாகும்!
இளைஞர்களே வாருங்கள்!
நம் பாரதப் பண்பாட்டை
இன்னும் ஒரு முறை உயிர்ப்பிப்போம்!
வாழ்க பாரதம்!
வாழிய செந்தமிழ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment