Wednesday, April 10, 2013

காடுகள் மலைகள் இறைவன் கலைகள் - இந்துமதி.மு


இறைவன் மனிதவுருவத்தை
கற்பனைவட்டத்துக்குள் வடிக்குமுன்பே ,
நிஜவுலகில் ஆதியும் அந்தமுமாய்
அவனியிலே அத்தனைக்குமுதலாய்
அவதாரமெடுத்து .....,
இப்பிரபஞ்சத்தை துவக்கிவைத்தது
இயற்கையின் ரூபமான காடுகளும் மலைகளும் !

மனிதவுயிரை கருவறைமுதல்
கல்லறைவரை இந்த நிலமகள் சுமந்து ,
அம்மனிதனுக்கு உணவளித்து உடையளித்து
உறையுள்கொடுத்து இறுதிவரை உயிர்காத்து ,
தன இறப்பிற்கு பின்பும்
தனக்கு இடமளித்த இந்த பூமாதேவியே ....,
மனிதன் தன் இச்சைக்கு இரையாக்கி ,
அந்த இயற்கையையே பொசுக்க நினைப்பது
வன்முறையல்ல - வதம் !!

வதம் செய்தவனுக்கு
விமோட்சனம் இல்லை !
நிலமகள் நோகும்வரை
மனிதவாழ்வுக்கு மோட்சமுமில்லை !!!

m.indhumathi@gmail.com

No comments:

Post a Comment