Friday, April 5, 2013

தீராத தீவிரவாதம் - -திருப்பதிசிவம்


காடுகள் பலவிதங்களில் அழிந்தாலும் பரவாயில்லை
நாடுகள் எனக்கு வேண்டுமென்று கல்நெஞ்சங்கொண்டு
போராளிகள் என்ற பெயரில் புனிதப்போர்
எனப் புதுப்பெயரிட்டு மனிதகுலத்தில் முளைத்த
மழலை மகளிர் முதியோர் வரை
பலரை  பழிகொண்டு பெறுகிராயா?  நாடு!
அடே  போராளி மனிதனே… நீ நடத்தும்
புனிதப் போரில் மாய்வது நின் மகளாக
மாதாவாக மணைவியாக இருந்தால் உன்
மணம் இவ்வளவு  இருக்கமாகுமா? எண்ணிப்பார்!
கோவிலில் வைக்கிராய் வெடிகுண்டுகளை..  நம்
மசுதிகளில் தேவாலயத்தில் வைக்கிராய் இதுமட்டுமா 
அங்காடி முதல் ஆடம்பரமாளிகை வரை ஆள்நடமாட்டம்
அதிகமுள்ள இடத்தை தேடிப்பார்த்து வைக்கிராய்
தேவையா! இந்தப்பழிகள் பாவங்கள் எண்ணிப்பார்!
அட அகம்பரிகளே  மனிதப்பிணத்தை அறுத்து
அதன் வையிற்றில் வைக்கிராய் வெடிகுண்டு
இதனால் நீ அடைவது என்ன? எண்ணிப்பார்!
பூவூலகில் பிறந்த யாவரும் பனிதமானவர்களே!
மண்ணுலகில் ஏனிந்த மாந்த குணமற்ற வெறி
அகிலத்திலிருந்து அழிந்தொழியட்டும் இத்தீராத தீவிரவாதம்!

No comments:

Post a Comment