Thursday, April 11, 2013

காடுகள் மலைகள் இறைவனின் கலைகள் - அரசன் நியூ


சுற்றும் பூமியும்
சுற்று சூழல்களும்
சற்றும் தாமதிக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பதால்
காற்றும் -மழையும் -ஆறும்
ஊற்றுநீரும் -ஊற்றின்நீரும்-இலைநீரும் = ஆரும்
கூற்றை இவைகளை பாரும்
ஆவியாகும் ஆரும் -மழையாகிவரும் ஆறும்
மலைகள் -காடுகலில் பொழிந்து
பள்ளம் மேடுகளில் வழிந்து
உள்ளம் மகிழும் செடிகளில்
பாய்ந்து வந்ததனால் -ஆடு மாடுகள்
மேய்ந்த பொழுது  சிங்கம் -புலிகள்
பாய்ந்து உண்டு
ஓயவுஉண்டு இருந்த எலி தவளையை  பாம்பு உண்ண
காய்ந்த வயிறோடு பருந்து விருந்து பாம்பை திண்ண
பறவை பூச்சி இலைகளை உண்ண
ஒன்றையொன்று -கொன்றுதின்று
உயிற் வாழ்கிறது மரங்கள் ஆக்சிசன் கொடுத்து மனிதனை
உயிற் வளர்க்கிறது
அனைத்தையும் உண்ணும் மனிதனை
அணைத்து இன்னும் -என்னும் குறையாமல் கொடுக்க
மனிதனுக்காகவே படைக்கப்பட்டவைதான்
காடுகள் -மேடுகள் -மலைகள் -அலைகள் எல்லாம்
இறைவனின் கலைகள்தான்
                                         

No comments:

Post a Comment