தாங்கும் பூமியின் தரையை பிளந்து
கனிமம் திருடி பிழைக்;கிறார்கள்
இந்த கயவர்களை
கிரானைட் குவாரி உரிமையாளன் என்று
பெருமையோடு அழைக்கிறார்கள்
உணவு உடை உறைவிடம் கொடுத்து
காக்கும் பூமித்தாயின்;
மடி சதையறுத்து விற்கிறார்கள்
வாழ்வில்
உயரத்தில் நிற்க ஆசைப்பட்டு
அன்னையின் சமாதிமேல் ஏறி நிற்கிறார்கள்
பொறுப்பற்றவர்களே…
இந்த பூவுலகை சிதைத்தழித்துவிட்ட பின்
உங்கள் வாழ்வின் நிலையை
கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்…
இந்த நொடிப்பொழுதே
ஆழ வெட்டும் ராட்சத இயந்திரங்களை
வேற்று கிரகத்திற்கு விற்பனை செய்யுங்கள்
No comments:
Post a Comment