Thursday, April 11, 2013
பறந்து போன பண்பாடு - பூர்ணகுரு
தமிழர்த் திருநாள் சித்திரைத் திருவிழா
குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து
தழையத்தழைய பாவாடைசேலைப் பெண்கள்
தரையில் தவழத்தவழ வேட்டி ஆண்கள்
சொந்தபந்தக்கூட்டம் உற்சாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் ...
தொழில்நுட்பம் நாகரீகம் பெயரி(ரளவி)ல் வளர்ச்சி
ஆடைக்குறைப்பு அலங்கார அகங்கார அணிவகுப்பு
நடை உடை பாவனையில் மாற்றம்
மது புகை மங்கை கேளிக்கை
எல்லையில்லா முரண்பாடு பறந்துபோனது நம்பண்பாடு ...
சொந்தவீட்டில் பெற்றோர் உடன்பிறந்தோர் முன்னிலையில்
குளியலறை துணி மாற்றறைக்குத் தாழிடுவர்
நட்டநடுரோட்டில் மாற்றார் காமுகந்தார் முன்னிலையில்
அங்கங்களை அங்கங்கே காட்டி நடந்திடுவர்
பார்த்தால் பார்வைக்கோளாறாம் பார்க்கக்கூடாதாம் ... நியாயம் ?
தன் வீட்டுப் பெண்கள் கண்ணகி
மாற்றான் தோட்டத்து மல்லிகை மாதவி
நீங்கள் காட்டுகிறீர் நாங்கள் காண்கிறோம் ... நியாயம் ?
மண்ணின் மணத்தை மானத்தை மனிதத்தை
நாகரீக வளர்ச்சி அடையச்செய்தது வீழ்ச்சி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment