போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - கே. பாலா
போதையில் வீழ்ந்து
பாதை மறந்து,,,,
மதிப்பை தொலைத்த
மனிதா,,,
அறிவை துறந்து
அழிவில் வீழ்ந்து
அகன்று போவது
அழகா,,?
மனைவி கதற
மகன்கள் மறுக,
மதுவில் காண்பது
சுகமா,,,,,?
மானம் கெட்டு
மனிதம் விட்டு
வாழ்வது என்ன
வாழவா,,,?
ஈன மதுவை
இன்றே விட்டு
இனிமை காண்க
என்றும்,,,,
No comments:
Post a Comment