நான் ஒரு தீவிரவாதி
ஆம்!
மதங்களை தீவிரமாக நேசித்தேன்
மத தீவிரவாதி ஆனேன் !
மதங்கள் சொன்னதோ
அனைத்தையும் நேசிக்க
மதங்களை தாண்டி
என்னவளை நேசித்தேன்
காதல் தீவிரவாதி ஆனேன் !!
என் காதலை என் வீட்டில்
தீவிர வாதம் செய்தேன்
பிடிவாதம் செய்தேன்
என் வீட்டிலோ நான் தீராத வியாதி !!!
என் தீவிர விவாதமோ தினம் தினம் தீவிரமானது
சாதி நாகம் தீண்டி பார்த்தது
பழி கொடுத்தேன் என் மதத்தையே...
என் தீவிரவாதத்தில் இனி எதை எதை பழி கொடுப்பேனோ தெரியவில்லை
என் தீவிரவாதம் தொடர்கிறது
No comments:
Post a Comment