ஆண்டாண்டு காலமாய்
ஓடிய நதிகள்
வற்றிக்கிடக்கிறது
அதில்-
வரட்சிநோய் தொற்றிக்கிடக்கிறது
இயற்கையின் விதியாலோ
அண்டைமாநில சதியாலோ
நீர்ச் சோகையால்
சோர்ந்துகிடக்கிறது நதிகள்
தாகம் தீர்க்க
தண்ணீர் கிடைக்கப்பெறா சோகத்தில்
கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன
நன்செய் நிலங்கள்
அவைகளில்
வாய்பிளந்து நிற்கும்
வெடிப்புகளில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
வேளாண்மை
அது சரி…
நீரற்று போன பின்பு
நதியென்ற சொல்லுக்கு அர்த்தமில்லை
சொற்கள் அர்த்தமிழந்துபோகாமல்
காப்பற்றுதற்கு இங்கொரு சட்டமில்லை.
No comments:
Post a Comment