Thursday, April 11, 2013
காடுகள் மலைகள் இறைவன் கலைகள் - devimalar
விழி கொட்டிச் சிரித்தன அதிகாலைப் பூக்கள்!
வழிகாட்டிச் சென்றன மலைவிட்ட நதிகள்!
களிகூட்டிச் சிரித்தது இதமான தென்றல்!
விண்முட்டி நின்றன (இலை) உதிராத மரங்கள்!
கதிர் தொட்ட இடமெல்லாம் பசும்பொன்னாய் மின்ன!
ஆதவனின் அழகில் ஆழ்ந்திருந்த பூமி
அழகாக பறவைகள் அலைஅலையாய் நகர-அதை
அங்கிருந்த அடிவானம் அதிசயத்துப் பார்க்க
அப்பப்பா எத்தனை அழகு - என்றெண்ணியபடி விழிவளர்ந்தேன்!
கடிகாரக் குருவி கணக்காக அழைத்தது
அடங்காத நதிக்கூட்டம் சவராகிப் பெய்தது
சத்தான நல்லுணவு பிரட்டாகிப்போனது
நிமிர்ந்து நின்ற மரக்கூட்டம் கட்டிடமாய் ஆனது!
எட்டிப் பார்த்தேன்- எதிரில் குட்டிக்குட்டியாய் போன்சாய் மரங்கள்
நச்சை உமிழும் வாகனக் கூட்டம்
கார்டூன் ரசிக்கும் கான்வென்ட் மழலைகள்!
அரிசி விளையும் மரத்தையும்
பால்தரும் ப்ரிட்ஸின் நிறத்தையும்
தேடி அலைந்தது போதும்
இனியாவது காப்போம் இயற்கையை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment