Wednesday, April 10, 2013

ஆனாலும் காதலிக்கிறேன் - nanetamizhan


அன்புடையாள் - அவள்மேல் ஆசைகொண்ட
நாள்முதல் ஆக்கிரமிப்புகள் ஆரம்பி;த்துவிட்டன
என் அகமெங்கும் ஏன் என் உடலெங்கும் கூட தான்
ஆனால் என் ஆசையை நிராகரித்து விட்டு
நீங்கிச் சென்றுவிட்டாள்; அவள்… நீங்காத நினைவுகளுடன் நான்…
ஆனாலும் காதலிக்கிறேன்… அவள் நற்குணத்தை…
நாடிநரம்பெங்கும் பின்னிப் பிணைந்த அவள் எண்ணங்களும்
    குருதியெல்லாம் சுருதி சேர்த்து இசை மீட்டும் வண்ணங்களும்
சேர்ந்து சிறகடித்த அரண் போன்ற என் அகத்தை
    இடித்து தரைமட்டமாக்கிவிட்டாள் அந்த தேவதை
ஆனாலும் காதலிக்கிறேன்… அவள் புன்னகையை…
என்னை கற்றவனாக்கினாள் உற்றாராக்கினாள்,
    ஒரு கலைஞனாக்கினாள், புது கவிஞனாக்கினாள்,
உரிமைகள் பல தந்திட்டாள், என் உயிரையும் அன்பால் மிஞ்சிட்டாள,;
    உலகநியதி கற்பித்தாள் எனை உயர்த்தி பார்க்க உழைத்திட்டாள்
இன்றோ என்னை வெறுத்து விடுத்து ஒதுக்கிவிட்டாள்
    காரணம் தெரியவில்லை… ஆனாலும் காதலிக்கிறேன்…
என்னவளின் பெண்மையை…  ஆயினும் காதலிக்கிறேன்…
அவள் குடியிருக்கும் என் இதயத்தை…
navaneethan480@gmail.com

No comments:

Post a Comment