Monday, April 8, 2013

நானுகிறாள் நம் தமிழ்த்தாய் - ராஜன் நியூ


செம்மொழி பெற்ற நம்மொழி
இம்மொழியாகுமோ  எம்மொழி
மொழி நம் விழி நாம்
இழிவு இல்லை  விடு வழி
இம்மொழி கற்றபின்
அம்மொழியை சுற்றலாமோ
தாய் யாரென்று குழந்தைக்கு தெரியும்
தாய் மொழி எது என்று அவனுக்கு புரியும்
தன தாயை
தான் =தன் தமிழில்
அம்மா என்று அழைக்காமல்
மம்மி டாடி என்று அழைக்கிறான்
நம்மொழியில் பிழைக்கிறான்
அதைக்கண்டு நாம் விழைக்கிறோம்
தாய்மொழியை படிப்பதில்லை
தவறு இல்லாமல் எழுத பிடிப்பதில்லை
முறை கெட்டாலும் துடிப்பதில்லை
தவறி வந்தாலும்  ஒடிப்பதில்லை
இதனால்தான் வெளியே
சொல்லமுடியாமலும்
மெல்லமுடியாமலும்
செல்ல முடியாமலும்
நானுகிறாள் நம் தமிழ்த்தாய்

rajaneegarai@gmail.com

No comments:

Post a Comment