Friday, April 5, 2013

காதலாகி - மலைமகள்



நெஞ்சு துடிக்கின்றதே-உன்
நேசம் நினைக்கயிலே
கஞ்சமலர் விழியில்-நிதம்
கண்ணீர் வடிக்கிறதே

அஞ்சி அஞ்சி பார்வை நடக்க
அதற்குள் பல ஆசை முளைக்க
கொஞ்சிடத்தான் மனம் ஓடிவரும்
பின் கூடாதென்று விட்டு விடும்

கெஞ்சிக்கெஞ்சி நீ கேட்கும் வரை
கேள்விக்கணைகள் போர்தொடுக்கும்
வஞ்சகமில்லாத இந்த நெஞ்சமும்
வாரிவழங்கவே துள்ளிக் குதிக்கும்

எண்ணக்கதவுகள் விண்ணில் திறக்கும்
ஏழிசை கீதங்கள் மீட்டிட அழைக்கும்
வண்ணக்கனவுகள் வாசலில் குவியும்
வானவில் தோரணம் கட்டி மகிழும்
------
காதலாகி கசிந்து மல்கி
வாழ்த்தி உன்னை பாடினேனே..
காலம் போகும் போக்கில் சென்று
காற்றில் உன் பெயர் எழுதினேனே..

காணாத வரமாக நானுனைக்கேட்டேனே
கண்ணுக்குள் நிலவாக பாத்திருந்தேனே
பெண்ணாகி போனதால் பேசாமலிருந்தேனே
பெருந்துயர் கடக்க முடியாமல் தவித்தேனே

குருவி பாடுது குயிலும் பாடுது-என்
குருதிக்கூட்டம் உன்னைத்தேடும்
அருவிபோல் அன்பு ஓடிப்பாயும்
அனைத்தும் நீயாய் மாறித்தேடும்

No comments:

Post a Comment