Thursday, April 11, 2013
ஈழமே நீயிடு காடா - umapalan
ஈழமே நீயிடு காடா - இங்கு
வாழ்தலே யெமக்கொரு பாடா
நாளுமே நமக்கின் னல்தான் - அதில்
தாளுதே தமிழ்மா னந்தான்
பாலர் கொலை செய்தால் - தாங்கும்
சட்டக் காப்பு! இங்கோ
பாலரைக் கொலை செய்தால் - ஓங்கும்
திட்டக் காப்பு!
வன்புணர் வாளர் வருந்திட - உலகில்
தண்டிக்கும் சட்டம்! தமிழெனில்
வன்புணர் வாகும் இங்கோ - ஒருவகைத்
தண்டிக்கும் சட்டம்!
இராவண்ண னாண்ட நாட்டில் - தமிழர்
இராவண்ண மாவதோ? இனியும்
பாராமுகம் ஏனோ பாரில் - பார்த்தும்
தேரா திருப்பரோ?
இயற்கை அழிவை நிறுத்த – நாளும்
இயற்றுவார் திட்டமே! இங்கோர்
இனத்தை காக்க ஏன்தான் - இன்னும்
இயற்றிடார் சட்டமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment