Saturday, April 6, 2013
ஈழமே நீ இடுகாடா ? - வசீகரப்ரியன்
தினம் தினம் ரத்தம் ருசிக்கும்
புத்தம் புசிக்கும் யுத்தம் பிடிக்கும்
தத்தம் இனம் மட்டுமே வாழணும்
என மொத்தம் முழக்கி
கொற்றம் நடத்தி கொட்டம் அடிக்கும்
ராஜபக்ஷேக்கள் இருக்கும் இலங்கையில்
தனி ஈழம் இனி கனவாமோ ?
கற்பை சிதைத்தும் அருவருப்பை விதைக்கும்
அற்பர்கள் அவையில் மூர்க்கர்கள் உலகில்
நியாயம் இருக்காதோ ? இவர்கள் சாயம்
ஒருநாள் வெளுத்து தொலைக்காதோ ?
உதிரஆற்றின் மேல் உட்கார்ந்து
புத்தம் ,முத்தம் பற்றி
சத்தமாய் பேசுது குற்றம் புரிந்த
மொத்த கயவர்கள் கூட்டம் !
புத்தம்பற்றி சுத்தமாய் தெரியத அறிவிலிகளின்
அர்த்தமற்ற பேச்சை கேட்டால்
காந்திக்கும் கோபம் வரும் ! அவர் போற்றிய
சாந்திக்கும் சேதம் வரும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment