Friday, April 5, 2013
தீராத தீவிரவாதம் - நாகசுந்தரம்
அன்புடையார் உடையர் என்றும் பிறர்க்கு என்றே
ஆன்றகவி வள்ளுவனும் உரைத்து நின்றான்
இன்றந்த கொள்கையது எங்கோ போச்சு
தற்கொலைப் படைகளாகி தரணிகொல்லும்
தன்னுயிர் போனாலும் தயவு இன்றி
மன்னுயிரை மாய்க்கின்ற தீவிரவாதம்
கண்ணே கரும்பே என்று தன்மகவை
கொஞ்சுகின்ற தாய்குணம் மனதில்வேண்டும்
மண்ணில்வாழ் உயிரையெல்லாம் மாய்க்கின்ற
மாக்களாய் மாறிவிட்டார் மனிதரிங்கே
பண்பாடி பேசிநிற்கும் பெரிதாம்; வாழ்வு
பேதம்பேசி உயிர்கொல்லும் கொள்கையாச்சு
விண்ணேவும் கணைகள் தன்னை வீசிப்போடு
தண்மைகுணம் தரணிக்கு வந்திடட்டும்
அறிவியலின் துணைகொண்டு அன்பைப்பேணு
எரியாதே கற்களையே போராட்டம் என்றால்
கறிசெய்ய வெட்டுகின்ற ஆட்டைப்போல
பறித்திடுவார் பார்மக்கள் பேருயிரை
என்ன செய்தால் தீருமிந்த திவிரவாதம்
சின்ன கவிதையிது தீர்த்திடட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment