Friday, April 5, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - guru.vijaykumar


போதைக்காக குடிப்பாய் உன்நிலை மறப்பாய்
உன் இன்பத்திற்காக பிறரை வதைப்பாய்
வீதியில் நாயாக விழுந்து கிடப்பாய்
சாலையில் மாடாக தறிகெட்டுச் செல்வாய்
வீட்டில் கழுதையாக மனைவியை உதைப்பாய்
மொத்தத்தில் மனிதம் மறைந்து மிருகமவாய்
தீயை விரும்பும் விட்டில் பூச்சியாய்
குடியில் மூழ்கி குடித்தனம் இழப்பாய்
பிள்ளைக்கு குடிகார மகன் பட்டம் தருவாய்
சமூகத்தில் புழுவைப்  போல மதிக்கப்படுவாய்
இறுதியில் உலகை விட்டு விரைந்து சென்றுவிடுவாய்
உன் குடும்பத்தை நடு வீதியில் நிறுத்துவாய்
வேண்டாம் இந்த நரகம் குடியை விடுவாய்
போதையை தெளிவாய் குடும்பத்தைக் காப்பாய்
சமூகத்தில் மனிதனாக மரியாதையுடன் வாழ்வாய்.

No comments:

Post a Comment