Wednesday, April 3, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - jairam



பாமரனும், பணக்காரனும்
படிப்பவனும்,  முன்னேற துடிப்பவனும்
பாகுபாடே பாராமல் - பாரில்
பொறுப்பை மறந்து,பொதுவுடைமை இழந்து
பொலிவிழந்த பொக்கிஷமாய் இன்று
போதைச் சேற்றில் மனித நாற்றுகளாய்!.....

அவமானத்தின் அவதாரமாய்
மதுபானத்தின் வருமானத்திலே
அரசே ஆட்சிசெய‌
அங்குமிங்குமாய் இருந்த  அசிங்கம் - இன்றோ
அங்கிகாரத்துடன் ஆயிரமாயிரம்
அச்சய பாத்திரங்களாய்!.....

கலாச்சார சீர்கேட்டில் கண்ணியம் தவறி
காமம் சூடி, கற்பழிப்புகள் கூடி
பொழுது முழுதும் போதையுடனே கழிந்து
விழுந்து எழுந்து விடியலைத் தேட‌
விடையோ விரக்தி மட்டும்
வீரியமாய் வெற்றிகொண்ட வீராப்பில்!.....

No comments:

Post a Comment