Wednesday, April 3, 2013
ஈழமே நீ இடுகாடா - jairam
ஈழமே நீ இடுகாடா?
இனப்படுகொலையெனும் ஈனச் செயலில்
இன்றுவரை கொன்று குவித்து
இருக்குமிடமெல்லாம் இடுகாடாகிவிட
உறைகிறதே எம் உதிரம் - ஒரு நொடி
உணர்ச்சியின் உச்சத்திலும் !!!
உரிமைதனை உரித்தாக்க எம் தமிழினமோ
உயிர்ப்புடன் உரமூட்ட
அதிகார வர்க்கமோ ஆணவத்தின்
அந்தத்தையும் முந்திக்கொண்டு
கொடூரத்தைக் குருதியுடன் குழைத்துக்கொண்டு
கிருமியாய் சிறுமிகளை சீரழித்து
பிஞ்சுகளையும் நஞ்சாய் நாசஞ்செய்து
கொன்று குவித்தனர் கொத்துக் கொத்தாய்
எம் தமிழீழம் தழையாதிருக்க!!!
தாய் பிள்ளைகளோடு இருந்து
தமிழோடு சிறந்து - தரணியில்
நிரந்திர சுதந்திரம் பெற்று
தளிர வேண்டிய எம் தமிழீழ
அன்பர் பூங்கா இன்றோ அமரர் பூங்காவாய்!!!...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment