Wednesday, April 3, 2013

காதலாகி - தாஸீம் (thazeem)



உறைந்து போன என் இதயச் சாற்றினுள் தேடுகிறேன் அவள்; நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும் மூளை வழியே எட்டிப்பார்க்கிறது மெதுவாக
நானாகிப் போன அவளின் கூந்தலிலே அடை காக்கிறேன் என் காதல் முட்டைதனை
இதமான அன்புச் சூட்டில் திருமணம் கருவாக கருத்தரிக்காமலே போனது பல வருடங்கள்.

என் இமைகளில் இடுக்குகளில் அவள் முகம் வெட்டிய பாச வாய்க்காலின் வழியே
இன்னும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது பட்டுப்போன மனதினைப் பசுமையாக்க
அக் கால்வாய்களின் ஓரத்தில் பச்சைப் புற்களாய் படர்ந்திருக்கிறது அவள் சிரிப்பு
அப் புற்களில் பற்களில் பூத்துக் குலுங்குகின்றது காதல் என்ற பெயரில் ஏதோ ஒன்று

காதலாகி கனிந்து விழுந்த இதயப் பழங்களிடையே இன்னும் இதமாய் இனிக்கிறது
பிரிவு எனும் வண்டுகள் கடித்த தடங்களுடன் என் இதயமும் ஒன்றாய்க் கிடந்து
பூவாயிருக்கும் போதினிலே பூப்பெய்திய காதலது புன்சிரிப்பாய் சிரித்திருக்க
விழுந்த இதயப்பழத்தை நோக்கி அனுதாபப் பூச்சிகள் படையெடுக்கும் புகலிடம் தேடி

காதலுடன் காதலாகி  சாதலையும் மறந்த இந் ஞாலத்தில் இன்னும்
என் இதயத்து ஈதலை புரிந்து கொள்ள யாருமில்லையோ
ஆதலால் நானே காதலாகி காற்றினுள் கரைகிறேன் தனியாக
அவள் நுதல் பட்டு என் இதழ் மலர நாடியே..

No comments:

Post a Comment