Thursday, April 4, 2013
ஈழம் மீளும் - பிஜிராமன்
படையெடுத்தோம் நாங்களின்று பாரறிய பார்பார்
விடையொன்று கிட்டுவரை வீழ்ந்திடோம் கேள்கேள்
ஒருகொள்கை கைக்கொண்டு ஓரினமாய் ஆனோம்
பெரும்படைச் சேர்த்து பெருமாற்றம் செய்தோம்
வருங்காலம் நம்மால் வளர்ந்து
சூழ்ந்த வினையாவும் சுக்காக போனதுகாண்
வீழ்ந்த உறவுகளின் வீழ்ச்சி முடிந்ததுகாண்
மண்ணில் குருதிமணம் மாற்றம் அடையிதுகாண்
எண்ணம் தெளிவாய் எரிந்ததனால் வெற்றியிங்கு
கண்முன் கனியிது காண்
சதைபிய்ந்(த) சடலங்கள் சாந்தமதைக் கொள்க
விதையான வீரரின் வீரமதைச் சொல்க
அழகாக ஈழம் அமைத்தோமே மெல்ல
குழுவாக சேர்ந்து குவித்தவெற்றி இஃதோ
வழுக்காது வாழும் சிறந்து
கொட்டும் முழக்கங்கள் கோடிவரை கேட்கட்டும்
கெட்ட தருணங்கள் கெட்டொழிந்து போகட்டும்
தொட்ட துயரங்கள் தோலுரிந்து போகட்டும்
விட்டிடாது சீற்றத்தை வீறுகொண்டு கெட்டியாய்
கட்டினால் ஈழத்தாய் கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment