Thursday, April 4, 2013
தாகம் தீர்க்காத நதிகள் - பிஜிராமன்
வற்றா நதியிடத்து வாழ்பவர் நாமன்றோ
பற்றால் பரிவாலே பார்புகழ வாழ்ந்தோமே
வெற்று விருப்பாலே வேரறுந்து போவதுயேன்
தொற்றிய நோய்போல் தொடர்வது கேடாகும்
குற்றத்தை உள்கொண்டு கூடல் அதைமறந்து
சுற்றம் முழுவதும் சுற்றும் நதியினை
முற்றத்தால் மூடல் இழப்பு
வாடும் பலவுயிர்க்கு வர்ணம் பிறந்திட
சாடும் மனிதகுலம் சாந்தமதை உள்ளேந்தி
கூடி அமர்ந்து குறைநிறைகள் பிய்த்தெறிந்து
காடுவழி ஓடி கடலில் கலந்துநாம்
வாடா திருக்க வழிவகுக்கும் நன்னதியை
மூடாது ஒன்றாய் முடிந்து, பொதுவாக
ஓடிடச் செய்தால் ஒழுங்கு
தருமே இயற்கை தடுப்பான் மனிதன்
வருமே அதனால் வருத்தம் தினமும்
இனியும் இறுக்கம் இருந்தால் எவர்க்கும்
பனியின் துளியும் படவும் மறுத்து
தனித்தால் தலைவலி தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment